நாகை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


நாகை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jan 2022 10:41 PM IST (Updated: 3 Jan 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிப்பாளையம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் தீக்குளிக்க முயற்சி
நாகையை அடுத்த ஒரத்தூர் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி மல்லிகா(வயது 56). இவர், நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார். திடீரென அவர் கேனில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 
இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நாகூர் போலீசார் ஓடி வந்து அந்த பெண்ணிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கினர்.
போலீசார் விசாரணை
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கூறியதாவது:-
எனது கணவரின் முதல் மனைவி இறந்து விட்டதால் என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 2008-ம் ஆண்டு அரசு சார்பில் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. மேலும் எனது கணவர் எனது பெயரில் விவசாய நிலத்தை எழுதி வைத்தார்.
பட்டாவை வாங்கி சென்றனர்
எனது கணவர் இறந்த பின்னர் அரசு கொடுத்த இடத்தில் வசித்து வந்தேன். இந்த நிலையில் அந்த இடத்தில் பசுமை வீடு கட்டித்தருகிறேன் எனக்கூறி இடத்தின் பட்டாவை உறவினர்கள் சிலர் என்னிடம் இருந்து வாங்கி சென்றனர்.
ஒரு மாதம் கழித்து அவர்களிடம் பட்டாவை கேட்டபோது என்னை அடித்து விரட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். 
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story