புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Jan 2022 11:34 PM IST (Updated: 3 Jan 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கண்ணமங்கலம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சம்பங்கியின் மகன் ருத்ரன் (25). இவருக்கும், இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த வேலுவின் மகள் மோனிகா (19) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 
தற்போது ருத்ரன் தனது மாமனார் வீட்டிலேயே வீட்டோடு மாப்பிள்ளையாக மனைவி மோனிகாவுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மோனிகா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு ஆபத்தான நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணி அளவில் மோனிகா பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் தாயார் விஜயா புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தரணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மோனிகாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story