வாழவச்சனூர் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்தன


வாழவச்சனூர் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்தன
x
தினத்தந்தி 3 Jan 2022 11:35 PM IST (Updated: 3 Jan 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

நோய் தாக்குதல் காரணமாக வாழவச்சனூர் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்தன. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

வாணாபுரம்

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் சந்தை நடைபெறுவது வழக்கம். 

சந்தைக்கு சுற்று வட்டார பகுதியான தச்சம்பட்டு, தானிப்பாடி, திருவண்ணாமலை, செங்கம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளான திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் கால்நடைகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் அதிக அளவில் வருவது வழக்கம். 

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை மற்றும் தற்போது பனிப் பொழிவின் காரணமாக கால்நடைகள் அதிகளவில் நோய்வாய்ப்பட்டு உள்ளது. இதனால் மாடுகள், ஆடுகள் உயிரிழந்து வருகிறது.

கால்நடைகளை நோய்கள் தாக்குவதால் ஆடு, மாடுகளை குறைந்த விலைக்கு வியாபாரிகள் கேட்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மாடுகள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது, ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட வில்லை. இதனால் ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Next Story