கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்
திருவாரூர் ஒன்றியம் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
58,400 பேர்
இதன்தொடர்ச்சியாக திருவாரூர் ஒன்றியம் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 58,400 பேர் என கணக்கீடு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அப்போது மருத்துவத்துறை துணை இயக்குநர் கீதா, உதவி கலெக்டர் பாலசந்திரன், ஒன்றியக்குழு தலைவா தேவா, பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர் பிரகாஷ், பள்ளி தலைமைஆசிரியர் ரஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story