பஞ்சு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 3 Jan 2022 11:43 PM IST (Updated: 3 Jan 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சு வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர், 
கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதிக்குட்பட்ட செல்வநகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 51). இவர் பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் வியாபாரத்திற்காக சில இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் பஞ்சு வியாபாரத்தில் உரிய லாபம் இல்லாததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 
இதனால் வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் மன வேதனையில் இருந்த  சுப்பிரமணி சம்பவத்தன்று சரஸ்வதி நகர் பகுதியை ஒட்டிய ஒரு கட்டிடம் அருகில் விஷம் குடித்த மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்குப்பதிந்து விசாணை நடத்தி வருகிறார்.

Next Story