வெப்படையில் தனியார் நூற்பாலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்


வெப்படையில் தனியார் நூற்பாலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 3 Jan 2022 11:46 PM IST (Updated: 3 Jan 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

வெப்படையில் தனியார் நூற்பாலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

பள்ளிபாளையம்:
வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
நூற்பாலை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வெப்படையில் சங்ககிரி செல்லும் சாலையில் தனியார் நூற்பாலை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் இருந்து புகைமூட்டம் வந்தது. இதனை கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து தண்ணீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். 
ஆனால் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து வெப்படை மற்றும் குமாரபாளையம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ மளமளவென எரிந்து நூற்பாலையில் இருந்த எந்திரங்களில் பிடித்து எரிய தொடங்கியது. 
விசாரணை
இதனையடுத்து திருச்செங்கோடு, நாமக்கல் மற்றும் பவானி உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைண அணைத்தனர். எனினும் இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் மற்றும் எந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. 
மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது எந்திரங்கள் உராய்வால் தீப்பிடித்ததா? என வெப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story