ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Jan 2022 11:56 PM IST (Updated: 3 Jan 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மதுரை, 
மதுரையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப் புகள் குறைவாக இருந்தது. அதாவது தினமும் 3, 4 என்ற எண்ணிக்கையில் மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது.  இந்த நிலையில் நேற்று திடீரென புதிய உச்சமாக ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதுபோல் நேற்று ஒரே நாளில் 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 90 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகம் அதிகமாக உள்ளது. அதன் எதிரொலியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்தபடி செல்லவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே மீண்டும் கொரோனா பாதிப்பால் உயிர் இழப்புகள் இல்லாமல் தவிர்க்க முடியும் என்றனர்.

Next Story