இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்
நம்மாழ்வாரின் கனவை நனவாக்க இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று மன்னார்குடியில் பெ.மணியரசன் கூறினார்.
மன்னார்குடி;
நம்மாழ்வாரின் கனவை நனவாக்க இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று மன்னார்குடியில், பெ.மணியரசன் கூறினார்.
நினைவேந்தல் நிகழ்ச்சி
காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் மன்னார்குடியில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவிரி உரிமை மீட்புக்குழு கோட்டூர் ஒன்றிய செயலாளர் வல்லூர் கண்ணன் தலைமை தாங்கினார். காவிரி மீட்புக்குழு தலைமை ஆலோசகர் பாரதிசெல்வன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ஹரிஹரன் வரவேற்றார்.
காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது
பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கவும் இயற்கை விவசாய முறைகளை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவும் அரும்பாடுபட்டவர் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார். நம்மாழ்வாரின் முயற்சியால்தான் பாரம்பரிய இயற்கை விவசாயம் இன்று எழுச்சி பெற்று உள்ளது.
இயற்கை விவசாயம்
உழவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் மேம்பாட்டுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். உழவர்களின் காவல் தெய்வமாக அவர் விளங்கினார். நம்மாழ்வாரின் கனவை நனவாக்க இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு பெ.மணியரசன் கூறினார்.
நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள், காவிரி உரிமை மீட்புக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் காவிரி உரிமை மீட்புக்குழு திருவாரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story