வெறிநாய் கடித்து 10 ஆடுகள் சாவு
பரமக்குடி அருகே வெறிநாய் கடித்து 10 ஆடுகள் இறந்து கிடந்தன.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடியை சேர்ந்தவர் கருப்பையா. விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (வயது 50) இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவரது வீட்டின் முன்பு கட்டப்பட்ட ஆடுகளை வெறிநாய் கடித்து குதறியது. இதில் 10 வெள்ளாடுகள் இறந்து கிடந்தன. காலையில் எழுந்து பார்த்த லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன் அங்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். பின்பு இதுகுறித்து பரமக்குடி தாசில்தார் தமிம் ராஜாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தருமாறு லட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story