வடமாநிலங்களுக்கு பொங்கல் கரும்புகள்


வடமாநிலங்களுக்கு பொங்கல் கரும்புகள்
x
தினத்தந்தி 4 Jan 2022 12:22 AM IST (Updated: 4 Jan 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் பகுதியில் இருந்து பொங்கல் கரும்புகள் வட மாநிலங்களுக்கு லாரிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மேலூர், 
மேலூர் பகுதியில் இருந்து பொங்கல் கரும்புகள் வட மாநிலங்களுக்கு லாரிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
விளைச்சல்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதி பெரியாறு பாசனத்தின் கடைசி பகுதியாகும். இதனால் இப்பகுதி நிலங்களில் படிந்துள்ள வண்டல்மண்  பொங்கல் கரும்பு விளைச்சலுக்கு உகந்ததாக உள்ளது. மேலூர் பகுதியில் விளையும் பொங்கல் கரும்புகள் நல்ல இனிப்பு சுவையுடனும், தடிமனாகவும் இருகின்றன. பல்லவராயன்பட்டி, சூரக்குண்டு, கல்லம்பட்டி, சுக்காம்பட்டி, எட்டிமங்கலம், நாவினிப்பட்டி, கீழையூர், தனியாமங்கலம், சருகுவலையபட்டி,மட்டங்கி பட்டி, கோட்டநத்தம் பட்டி, கொட்டகுடி, திருவாதவூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கரும்புகள் பயிரிடப்பட்டு உள்ளன.
அதிக அளவில் கரும்புகள்
 இந்த ஆண்டு மழை பெய்து தண்ணீர் வசதி இருந்ததால் அதிக அளவில் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொங்கல் விழாவை வட இந்திய மாநிலங்களில் கொண்டா டப்படும் சங்கராந்தி விழாவில் கரும்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த விழாவுக்கு மேலூர் கரும்புகளை வெளி மாநில வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கிசெல்வது ஆண்டு தோறும் வழக்கமாக உள்ளது. 
குஜராத் , மும்பை, டில்லி, மகாராஷ்ட்டிரா, கல்கத்தா, ஆந்திரா உள்பட வட மாநிலங்களுக்கு மேலூரில் இருந்து லாரிகளில் பொங்கல் கரும்புகள் ஏற்றுமதியாகின்றன. இதற்காக வியாபாரிகள் மேலூரில் முகாமிட்டு லாரிகளில் ஏற்றுமதி செய்து வருகின்றனர். 
மதிப்பீடு
இது குறித்து திருவாதவூரை சேர்ந்த கரும்பு விவசாயி சின்னக் கருப்பன் கூறியதாவது:- 15 கரும்புகள் ஒரு கட்டில் இருக்கும். இவ்வாறாக 20 கரும்பு கட்டுகள் ஒரு மாட்டுவண்டி எனவும், சாதாரண லாரி ஒன்றுக்கு 15  மாட்டு வண்டிகளும், நீளமான டாரஸ் லாரிக்கு 25 மாட்டுவண்டி கரும்புகள் என மதிப்பீடு செய்து விற்கப்படுகினறன. கடந்த ஆண்டு கரும்பு கட்டு ஒன்று ரூ.400 வரை விற்றன. இந்த ஆண்டு ரூ.250முதல் ரூ.300வரை விற்பனை விலை குறைந்துவிட்டது. அதிக செலவு செய்து பயிரிட்டதற்கு ஏற்ப விலை கிடைக்கவில்லை என கவலையுடன் தெரிவித்தார். மேலூர் பகுதியில் இருந்து வெளி இடங் களுக்கு லாரிகளில் கரும்பு ஏற்றுமதி தற்போது தீவிரமடைந்து உள்ளது.

Next Story