ரெயில் முன் படுத்து வியாபாரி தற்கொலை
கடன் தொல்லையால் கீரனூரில், ரெயில் முன் படுத்து வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ரெயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் காரைக்குடியிலிருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த ஆண் ஒருவர் திடீரென தண்டவாளத்தின் குறுக்கே படுத்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் சைகையால் அவரை தள்ளிப் போகும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால், அவர் மீது ரெயில் மோதியதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்த தகவலின்பேரில், திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வியாபாரி
பின்னர், தற்கொலை செய்து கொண்டவர் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கீரனூர் தேரடி பகுதியில் காய்கறி மற்றும் தேங்காய் வியாபாரம் செய்து வந்த முகமது யூசுப் (வயது 60) என்பதும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் தொல்லையாலும் இந்த விபரீத முடிவை எடுத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story