காரில் கடத்திய ரூ.3½ கோடி ‘ஆம்பர்கிரீஸ்’ பறிமுதல்
தென்காசியில் காரில் கடத்திய ரூ.3½ கோடி ஆம்பர்கிரீசை (திமிங்கில உமிழ்நீர்) போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி:
தென்காசியில் காரில் கடத்திய ரூ.3½ கோடி ஆம்பர்கிரீசை (திமிங்கில உமிழ்நீர்) போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜா மற்றும் போலீசார் நேற்று காலையில் தென்காசி பழைய பஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் அந்த காரில் ஆம்பர்கிரீஸ் என்று அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் 2 பெரிய கட்டிகளை முறைகேடாக கடத்தி சென்றது தெரியவந்தது. மொத்தம் சுமார் 21 கிலோ எடை கொண்ட அவற்றின் மதிப்பு சுமார் ரூ.3½ கோடி ஆகும். இதையடுத்து ஆம்பர் கிரீசுடன் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
காரில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த ஜார்ஜ் மைக்கேல்ரோஸ் (வயது 46), நெல்லை தாழையூத்தைச் சேர்ந்த மோகன் (52) ஆகிய 2 பேரையும் பிடித்து, கடையநல்லூர் வனச்சரக அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் ஆம்பர் கிரீசுடன் காரையும் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக ஜார்ஜ் மைக்கேல்ரோஸ், மோகன் ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
Related Tags :
Next Story