சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயற்சி
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன சோதனையின்போது சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாகன சோதனையின்போது சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தர்மராஜன்(வயது 49). நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் வாகன சோதனையில் தர்மராஜன் மற்றும் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் விதிகளை மீறி வந்ததாக கூறி போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்த கூறினர். ஆனால் அவர் நிற்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
கைது
இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது ஆத்திரம் அடைந்த அவர் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜனை கத்தியால் குத்த முயன்றார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கிருந்து அவர் தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ேமாட்டார் சைக்கிளில் வந்தவர் பெயர் வெங்கடேஷ் என்பதும், அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தப்பியோடிய அவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story