பொதுமக்களிடம் குறை கேட்ட எம்.எல்.ஏ.


பொதுமக்களிடம் குறை கேட்ட எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 4 Jan 2022 1:10 AM IST (Updated: 4 Jan 2022 1:10 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களிடம் குறை கேட்ட எம்.எல்.ஏ.

ராஜபாளையம், ஜன.4-
ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற தலைப்பில்  தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறை கேட்டு மனு பெற்றுக்கொண்டார். மேலும் உடனடியாக தீர்க்க முடியாத கோரிக்கைகளை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். மேலும் ராஜபாளையம் துரைசாமியாபுரம் செங்குட்டுவன் தெருவில் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை அவர் திறந்து வைத்தார்.

Next Story