கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்
வெம்பக்கோட்டை தாலுகா அன்னபூரணியாபுரம் கிராம மக்கள் அந்த பகுதியில் உள்ள மதுபான கூடத்தை இடமாற்றம் செய்யக்கோரி விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பல்வேறு சமூகங்களை சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ஊருக்கு முன்பாக ஊர்க்காவலன் மாடசாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகில் செவல்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் ஐ.டி.ஐ. உள்ளது. இவற்றின் நடுவில் தனியார் மதுபானக்கூடம் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் ஐந்து முறை மனு கொடுத்துள்ளோம். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இந்த மதுபானகூடத்தால் பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் வேலைக்கு செல்வோருக்கு சிரமம் ஏற்படுகிறது, எங்களின் இயல்பு வாழ்க்கை பாழாகி விட்டது. எனவே இந்த மதுபான கூடத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்களாகிய நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story