மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு
மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு
தளவாய்புரம்
தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டி தொண்டைமான் குளம் கண்மாய் பகுதியில் நேற்று முகவூர் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன்(வயது 55) என்பவர் மீன்பிடிக்க வலையை வீசி இருந்தார். இந்த வலையில் சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருந்தது தெரியவந்தது. உடனே இதுபற்றி சேத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் விரைந்து வந்து மீன் வலையில் சிக்கியிருந்த மலைப்பாம்பை மீட்டு தேவதானம் சாஸ்தா கோவில் வனப்பகுதியில் விட்டனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள சாஸ்தா கோவில் அணைக்கட்டுப் பகுதியிலிருந்து வெளியேறும் நீர் இந்த கண்மாய்க்கு வருகிறது என்பதும், இந்த கண்மாயில் பலதடவை மீன் வலையில் மலைப்பாம்பு சிக்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story