1,612 மாணவர்களுக்கு தடுப்பூசி
சிவகாசி வட்டாரத்தில் 1,612 மாணவர்களுக்கு தடுப்பூசி
சிவகாசி
சிவகாசி வட்டாரத்தில் நேற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்.ஆர்.வி. கல்லூரி, அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி, காளீஸ்வரி கல்லூரி, சங்கரலிங்கம் புவனேஸ்வரி கல்லூரி, மெப்கோ கல்லூரி, அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்.ஐ.பி.டி. கல்லூரி, எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி என 9 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 15 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் 1612 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. எஸ்.எப்.ஆர். கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் கலந்து கொண்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார மருத்துவ அதிகாரி வைரகுமார், சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ஷேக்முகம்மது, சித்திக், சுகாதார அலுவலர் சுருளிநாதன், வினோத்குமார், முன்னாள் கவுன்சிலர் சேர்மத்துரை, நகர காங்கிரஸ் தலைவர் குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story