கோபி பகுதியில் 2 வீடுகளில் ஸ்கூட்டர்-செல்போன்கள் திருடியவர் கைது


கோபி பகுதியில் 2 வீடுகளில் ஸ்கூட்டர்-செல்போன்கள் திருடியவர் கைது
x
தினத்தந்தி 4 Jan 2022 3:23 AM IST (Updated: 4 Jan 2022 3:23 AM IST)
t-max-icont-min-icon

கோபி பகுதியில் 2 வீடுகளில் ஸ்கூட்டர், செல்போன்கள் திருடியரை போலீசார் கைது செய்தார்கள்.

கடத்தூர்
கோபி பகுதியில் 2 வீடுகளில் ஸ்கூட்டர், செல்போன்கள் திருடியரை போலீசார் கைது செய்தார்கள். 
ஸ்கூட்டர் திருட்டு
கோபி ராமர் விரிவாக்க வீதியைச் சேர்ந்தவர் முகமது ஆதாம் (வயது 24). இவர் மதரசா பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டின் முன்பு தன்னுடைய ஸ்கூட்டரை நிறுத்திவைத்திருந்தார். சற்று நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை. அதில் முகமது ஆதாம் தன்னுடைய செல்போனையும் வைத்திருந்தார். யாரோ மர்ம நபர்கள் ஸ்கூட்டரையும், அதில் இருந்த செல்போனையும் திருடிக்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோபி போலீசில் முகமது ஆதாம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்கூட்டரையும், செல்போனையும் திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தார்கள். 
ஜவுளி கடை ஊழியர்
கோபி கருமாயா வீதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். கோபியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்தியவதி. கடந்த 1-ந் தேதி இரவு சத்தியவதி செல்போன் மற்றும் வெள்ளிக்கொலுசை வீட்டில் இருந்த டேபிளில் வைத்திருந்தார். மறுநாள் காலையில் டேபிளில் வைத்திருந்த கொலுசு மற்றும் செல்போனை காணவில்லை. யாரோ திருடி சென்றுவிட்டார்கள். இதுகுறித்து சத்தியவதி கோபி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன், வெள்ளிக்கொலுசை திருடிச்சென்றவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வந்தார்கள்.
கைது
 இந்தநிலையில் கோபி புள்ளம்பாளையம் பிரிவில் கோபி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் வந்தார். இதனால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் திருச்சி மாவட்டம் கல்பட்டியை சேர்ந்த ராஜா முகமது (வயது 27) என்பதும், இவர்தான் கோபி ராமர் விரிவாக்க வீதியில் முகமது ஆதாமின் ஸ்கூட்டரையும், கோபி கருமாயா வீதியில் தமிழ்ச்செல்வன் வீட்டில் வெள்ளிக்கொலுசுகள், செல்போன்கள் ஆகியவற்றை திருடியவர் என்பதும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜாமுகமதுவை கைது செய்து அவரிடம் இருந்து ஸ்கூட்டர், 2 செல்போன்கள், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தார்கள்.

Related Tags :
Next Story