தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் 10-ந்தேதி குறை தீர்க்கும் முகாம்


தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் 10-ந்தேதி குறை தீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 4 Jan 2022 2:38 PM IST (Updated: 4 Jan 2022 2:38 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், விரைவாக தீர்வு காண்பதற்காக ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி “நிதி ஆப் கே நிகத்” என்ற பெயரில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில், சந்தாதாரர்கள், தொழிலாளர்களின் நீண்டகால குறைகள், கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி “நிதி ஆப் கே நிகத்” (வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகாமையில்) என்ற பெயரில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலக வளாகத்தில் வருகிற 10-ந்தேதி குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது. சந்தாதாரர்கள், தொழிலாளர்கள் தங்களுடைய புகார்கள், நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்காக முகாம் நடைபெறும் தினத்தன்று தகுந்த ஆவணங்களுடன் நேரடியாக வரலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் ராஜீவ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story