திருவள்ளூர் மாவட்ட தையல் தொழில் கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு
திருவள்ளூர் மாவட்ட மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் மனு அளித்துள்ள நிலையில் பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு திருவள்ளூர் விக்னேஸ்வரா நகர் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர்.
இவர்களுக்கு தமிழக அரசு மொத்தமாக துணிகளை கொடுத்து அதனை கூலி அடிப்படையில் தைத்து பள்ளிக்கல்வித் துறை மூலமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடையாக வழங்குவதற்காக வினியோகம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் இந்த மாவட்ட மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் மனு அளித்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் இங்கு பணிபுரியும் பெண்கள் இந்த கூட்டுறவு சங்கத்தை இரண்டாக பிரிக்க கூடாது என வலியுறுத்தியும், இங்கிருந்து மையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தும் பணியை நிறுத்திவிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story