கொரோனா தொற்றால் உயிரிழந்த 1,471 பேரின் வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தோர் மொத்தம் ஆயிரத்து 850 நபர்களில், 1,471 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசின் உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம்.
மேலும் இதுகுறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலக தாசில்தார் பேரிடர் மேலாண்மை பிரிவு தொலைபேசி எண் 9384056215 மற்றும் மாவட்ட உதவி மைய எண் 18005997626 ஆகிய தொலைபேசி எண்களிலும் மற்றும் dmtahsildar.tlr@gmail.com, dmtahsildar.tlr@tn.gov.in ஆகிய பேரிடர் மேலாண்மை மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story