நகை, பணம் திருடிய 2 பேர் கைது


நகை, பணம் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jan 2022 8:44 PM IST (Updated: 4 Jan 2022 8:44 PM IST)
t-max-icont-min-icon

நகை, பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, 
மதுரை தல்லாகுளம், கூடல்புதூர் மற்றும் புதூர் பகுதியில் பூட்டியிருந்த வீடு, கடைகளை உடைத்து நகை, பணம் திருடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவினர் பேரில் துணை கமிஷனர் ராஜசேகரன் மேற்பார்வையில் தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் திருட்டு சம்பவங்களில் தேடி வந்த நிலையில் காளையார்கோவிலை சேர்ந்த காளிராஜன் மற்றும் மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த கார்த்திக்குமார் என்ற கவிகார்த்தி ஆகியோரை பிடித்து விசாரித்த போது அவர்கள் வீடு, கடைகளில் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 27 பவுன் நகைகள், 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களை பிடித்த தனிப்படை யினரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

Next Story