நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பணிகளுக்காக திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பணிகளுக்காக திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி:-
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பணிகளுக்காக திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்
தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் 100 நாள் வேலைத்திட்டம் நடைபெறுவது போல நகராட்சி பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அரசு தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து பல்வேறு நகராட்சிகள் தங்கள் நகராட்சிகளுக்கு இந்த திட்ட பணிகளை வழங்க வேண்டும் என விண்ணப்பித்தன. இதில் திருத்துறைப்பூண்டி நகராட்சி முதலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விளக்க கூட்டம்
இந்த நிலையில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பொதுமக்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? எந்த வயதினர் இந்த பணிகளில் ஈடுபடலாம்? என்னென்ன பணிகள் வழங்கப்படும்? என்ற விவரங்கள் குறித்த விளக்க கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது.
கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ., திருத்துறைப்பூண்டி நகரசபை முன்னாள் தலைவர் பாண்டியன், நகராட்சி பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூ.1 கோடி ஒதுக்கீடு
இதில் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது பேசிய ‘நகராட்சி பொறியாளர், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட பணிக்காக திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என கூறினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் சண்முகசுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகேசன், பா.ம.க. நகர செயலாளர் கல்வி பிரியன்நீதிராஜா, அ.ம.மு.க. நகர செயலாளர் ஆனந்த், காங்கிரஸ் நகர தலைவர் எழிலரசன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் ரகுராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story