3 பேர் தங்கப்பதக்கம் வென்றனர்


3 பேர் தங்கப்பதக்கம் வென்றனர்
x
தினத்தந்தி 4 Jan 2022 9:17 PM IST (Updated: 4 Jan 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

3 பேர் தங்கப்பதக்கம் வென்றனர்

திருப்பூர், 
கோவை பாரதியார் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் 3 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். 16 பேர் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
3 பேருக்கு தங்கப்பதக்கம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கடந்த ஏப்ரல் மாதம் பருவ தேர்வுகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 3 தங்க பதக்கம், 1 வெள்ளி பதக்கம் உள்பட 16 சிறப்பு இடங்களை பிடித்துள்ளதாக கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, இளங்கலை வரலாறு துறையில் வடிவேல் முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தையும், பொருளியல் துறை மாணவர் சந்தோஷ் 9-வது இடத்தையும், சர்வதேச வணிகவியல் துறையில் ராஜா 4-வது இடத்தையும், ரதீஸ் 5-வது இடத்தையும், இளநிலை இயற்பியல் துறையில் சாகுல் அமீது 8-வது இடத்தையும், வேதியியல் துறையில் ஆஷிகா இளமதி 6-வது இடத்தையும், விலங்கியல் துறையில் கோகிலவாணி 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
16 பேர் சிறப்பிடம்
முதுநிலை பட்டப்படிப்பில் வேதியியல் துறை மாணவி மோகன பிரியா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இதே துறையில் நவீனா 3-வது இடத்தையும், நிர்மல்குமார் 7-வது இடத்தையும் பெற்றுள்ளனர். விலங்கியல் துறையில் காவியா முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். அஞ்சு 2-வது இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும், இதே துறையில் அனுஸ்ரீ 3-வது இடத்தையும், ஜெம்சியா 6-வது இடத்தையும், அனிலா உன்னிகிருஷ்ணன் 7-வது இடத்தையும், சர்வதேச வணிகவியல்துறையில் ரோகிணி 4-வது இடத்தையும் என 16 பேர் சிறப்பிடம் பெற்றுள்ளனர் என்றார்.
சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், துறை தலைவர்கள் பாராட்டினார்கள்.

Next Story