தெங்குமரஹாடாவில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி


தெங்குமரஹாடாவில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 4 Jan 2022 9:22 PM IST (Updated: 4 Jan 2022 9:22 PM IST)
t-max-icont-min-icon

தெங்குமரஹாடாவில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி

கோத்தகிரி

தெங்குமரஹாடாவில் நடந்த மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி யில் கெங்கரை அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 

கைப்பந்து போட்டி

புத்தாண்டை முன்னிட்டு அல்லிமாயார் ஸ்போர்ட்ஸ் கிளப், நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம், நீலகிரி பண்டைய பழங்குடியினர் பேரவை சார்பில் நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா அருகே உள்ள அல்லிமாயார் கிராமத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது. 

இந்த போட்டியில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற கெங்கரை அணி மற்றும் கீழ் கோத்தகிரி அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

கெங்கரை அணி சாம்பியன்

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில் முதல் செட்டை 21 - 24 என்ற புள்ளிகள் கணக்கில் கெங்கரை அணி கைப்பற்றியது. தொடர்ந்து சுதாரித்து ஆடிய கீழ் கோத்தகிரி அணி 24 -20 என்ற புள்ளி கணக்கில் 2-வது செட்டை கைப்பற்றியது. 

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 3-வது செட்டில் இரு அணிகளுமே சிறப்பாக விளையாடினார்கள். இருந்தபோதிலும் கெங்கரை அணி மிகவும் சிறப்பாக விளையாடி 24-18 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 

பரிசளிப்பு விழா

இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில் கெங்கரை அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும், 2-வது இடத்தை பிடித்த கீழ் கோத்தகிரி அணிக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பை, 3-வது இடத்தை பிடித்த ஆல்வின் பிரதர்ஸ் அணிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையும், 4-வது இடத்தை பிடித்த ஆனைகட்டி அணிக்கு ரூ.3 ஆயிரம் பரிசு மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.


Next Story