போடியில் இருந்து கேரளாவுக்கு கற்களை கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
போடியில் இருந்து கேரளாவுக்கு கற்களை கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
போடி:
போடி குரங்கணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார், போடி அருகே முந்தல் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடைகற்களை ஏற்றிக்கொண்டு கேரளா செல்வதற்கான வந்த 3 டிப்பர் லாரிகள் வந்தது.
அந்த லாரிகளை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததுடன், ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது அதில் கடந்த 2-ந்தேதி காலையில் உடைகற்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2-ந்தேதி காலையில் சென்று உடைகற்களை கேரளாவில் இறக்கிவிட்டு, மீண்டும் அதே அனுமதிசீட்டை காட்டி 2-வது முறையாக கற்களை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் லாரிகளை ஓட்டி வந்தவர்கள், கேரள மாநிலம் ராஜாக்காட்டை சேர்ந்த மார்டின்பீட்டர், வைஷ்ணவ், தோப்புபாறையை சேர்ந்த பாபு ஆகியோர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே போலீசார் ஆவணங்களை சரிபார்த்து கொண்டிருக்கும்போது 3 டிரைவர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story