வருசநாடு அருகே சாலையோரம் இறந்து கிடந்த காட்டெருமை


வருசநாடு அருகே சாலையோரம் இறந்து கிடந்த காட்டெருமை
x
தினத்தந்தி 4 Jan 2022 9:48 PM IST (Updated: 4 Jan 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே சாலையோரம் காட்டெருமை இறந்து கிடந்தது.

கடமலைக்குண்டு:
வருசநாடு அருகே அரசரடி வனப்பகுதியில் வெள்ளிமலை சாலை ஓரத்தில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மேகமலை வனச்சரகர் சதீஷ்கண்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 
பின்னர் கால்நடை டாக்டரை வரவழைத்து, இறந்த காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது காட்டெருமையின் உடலில் சந்தேகப்படும் வகையில் எந்தவித காயங்களும் இல்லை. இதனால் அந்த காட்டெருமை வயது முதிர்வு அல்லது நோய் வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என்று கால்நடை டாக்டர் தெரிவித்தார். 
இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து காட்டெருமையின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

Next Story