தேவதானப்பட்டி பகுதியில் கரும்பு அறுவடை பணி தீவிரம்
தேவதானப்பட்டி பகுதியில் கரும்பு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கரும்பு சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். தற்போது அந்த கரும்புகள் விளைந்து அறுவடைக்கு தயாரானது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு விளைந்த கரும்புகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பொங்கல் கரும்புக்கான மண் வளம் தேவதானப்பட்டி மற்றும் சின்னமனூர் பகுதிகளில் உள்ளது. தேவதானப்பட்டி பகுதியில் விளையும் கரும்புகளை கொள்முதல் செய்ய தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை தருவார்கள். ஆனால் இந்த ஆண்டு கரும்புகளை வாங்க வியாபாரிகள் இன்னும் வரவில்லை. கொரோனா ஊரடங்கு இதற்கு ஒரு காரணமாக உள்ளது. இருப்பினும் கரும்புகளை அறுவடை செய்து வருகிறோம்.
இதற்கிடையே தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் கரும்புக்காக இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் கரும்புகளை கொள்முதல் செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இப்பகுதி விவசாயிகளின் நிலைமையை கருத்தில்கொண்டு அரசே கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story