பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்-கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எச்சரிக்கை
பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி:
ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ், ஒமைக்ரான் வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள், இணைப்புகள் நல்ல நிலையில் உள்ளதா? என்பதை சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உறுதிப்படுத்த வேண்டும்.
அபராதம்
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தற்போது 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முககவசம் அணியாத நபர்கள் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, உதவி கலெக்டர் சதீஷ்குமார், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story