தனியார் பஸ் மோதி பள்ளி ஆசிரியர் பலி
திருப்புவனம் அருகே வேலைக்கு சென்ற போது தனியார் பஸ் ேமாதி பள்ளி ஆசிரியர் பலியானார்.
திருப்புவனம்,
திருப்புவனம் அருகே வேலைக்கு சென்ற போது தனியார் பஸ் ேமாதி பள்ளி ஆசிரியர் பலியானார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆசிரியர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள சொக்கநாதிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தண்டிலிங்கம் (வயது 34). இவர் திருப்பாச்சேத்தி அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர கம்ப்யூட்டர் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருைடய மனைவி காவேரி (28). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
ஆசிரியர் தண்டிலிங்கம் குடும்பத்துடன் திருப்புவனத்தில் உள்ள பூங்கா நகரில் தங்கி தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.
பஸ் மோதி பலி
திருப்புவனம், செல்லப்பனேந்தல் விலக்கு அருகே சென்ற போது எதிரே பரமக்குடியில் இருந்து மதுரை வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஆசிரியர் தண்டிலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. இது குறித்து அவரது மனைவி காவேரி திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் வழக்கு பதிவு செய்து தனியார்பஸ் டிரைவர் சமயமுத்துவை (50) கைது செய்தார். பள்ளிக்கு வேலைக்கு சென்ற இடத்தில் தனியார் பஸ் மோதி ஆசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story