ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலி
ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலி
பல்லடம்,
பல்லடம் அருகே விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியானார்.
மாணவி
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்த கருணாநிதி மகள் ரூப சத்யா தேவி (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ள மாணவி திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் சேருவருக்கு விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் மார்கழி மாதத்தை முன்னிட்டு தினமும் ரூப சத்யா தேவி சென்னிமலைபாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்.
அதேபோல் நேற்றும் விநாயகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஸ்கூட்டரில் சென்றார். திருப்பூர்-கணபதி பாளையம் ரோட்டில் சென்னிமலைபாளையம் நடுத்தோட்டம் பகுதியில் செல்லும்போது பின்னால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
ஸ்கூட்டர் மீது லாரி மோதல்
அந்த லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த ரூப சத்யா தேவி மீது லாரியின் சக்கரம் ஏறியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரூப சத்யா தேவியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். லாரி மோதி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story