ஆட்டோவில் கடத்திய 495 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
காரைக்குடி அருகே நடந்த வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்திய 495 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை,
காரைக்குடி அருகே நடந்த வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்திய 495 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ண ராஜா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சவுந்திரராஜன், சுரேஷ் மற்றும் ஏட்டு சரவணகுமார் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சோமநாதபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியில் வந்த ஆட்டோ ஒன்றை மறித்து சோதனை செய்தனர்.
அந்த ஆட்டோவில் 495 கிலோ எடையுள்ள 11 மூடை ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தது தெரிய வந்தது.
டிரைவர் கைது
இதைத்தொடர்ந்து காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சங்கரபாண்டி (62) என்பவரை கைது செய்து ஆட்டோவுடன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகளை சிவகங்கையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story