கடலூர் மாவட்டத்தில் 7½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்


கடலூர் மாவட்டத்தில் 7½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
x

கடலூர் மாவட்டத்தில் 7½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.


கடலூர், 

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி இந்த திட்டத்தை நேற்று சென்னையில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். அதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் ஆகியோர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

7½ லட்சம் பேர்

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 419 அரிசி குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் 428 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

அவர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, ஒரு முழு நீள கரும்பு, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள் 100 கிராம், மிளகாய்த்தூள் 100 கிராம் உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பணி நடந்தது.

நீண்ட வரிசையில்...

ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டதால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டும் வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று சென்றனர். டோக்கன் பெறாதவர்களுக்கு வாய்மொழியாக அவர்கள் எந்த நாள், எந்த நேரத்தில் வர வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்து அனுப்பி வைத்தனர். சில ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கி சென்றனர். இதை வாங்க வந்தவர்கள் முக கவசம் அணிந்து வந்தனர். 

ரேஷன் கடை களில் சானிடைசர் வைக்கப்பட்டு இருந்தது. அதன் மூலம் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்தனர். கைவிரல் ரேகை பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் பரிசு தொகுப்பு பெற்றதற் கான பதிவேட்டில் கையெழுத்து வாங்கினர். 

இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், விடுதல் இன்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story