கஞ்சா விற்ற 5 பேர் கைது


கஞ்சா விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jan 2022 11:15 PM IST (Updated: 4 Jan 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன்(பயிற்சி) தலைமையிலான போலீசார் மூரார்பாளையம் சுடுகாடு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சங்கராபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுபாசை(வயது 28) கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மூரார்பாளையத்தை சேர்ந்த முத்துராஜா மகன் பூவரசனை வலைவீசி தேடி வருகிறார்கள். அதேபோல் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால்(பொறுப்பு) தலைமையிலான போலீசார் வட சிறுவள்ளூர் ஏரிக்கரை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தேவபாண்டலத்தை சேர்ந்த சக்திவேல் மகன் பாரதி(வயது 21) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டி கிராமத்தில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த கோபி (20) மற்றும் 18 வயதுடைய சிறுவனை அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்றதாக சேலம் மாவட்டம் கருமந்துறை கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் அருண்ராஜா(19) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story