அரிச்சல்முனையில் உருவான மணல் பரப்பு


அரிச்சல்முனையில் உருவான மணல் பரப்பு
x
தினத்தந்தி 4 Jan 2022 11:30 PM IST (Updated: 4 Jan 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

கடல் உள்வாங்கியதால் அரிச்சல்முனையில் உருவான மணல் பரப்பு

ராமேசுவரம்
முன்பு தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றிய வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வெறும் மணல் பரப்பாகவே இருந்துவந்தது. இவ்வாறு காணப்பட்ட அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட தூரம் வரையிலும் மணல் பரப்பில் இறங்கி நடந்து சென்று, கடல் அழகை பார்த்து ரசித்தனர்.
இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு கடல் நீரோட்டத்தின் வேகத்தால் தெற்கு மற்றும் வடக்கு கடற்கரை பகுதி மணல் பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு கடலாக மாறியது. 
இந்தநிலையில் தற்போது தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலையை ஒட்டிய தெற்கு கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கி மணல் பரப்பு தெளிவாக தெரிய தொடங்கியுள்ளது. இந்த மணல் பரப்பில் சுற்றுலா பயணிகள் இறங்கி நடந்து சென்று கடல் அழகை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Next Story