நாளை மின் தடை


நாளை மின் தடை
x
தினத்தந்தி 4 Jan 2022 11:50 PM IST (Updated: 4 Jan 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகளுக்காக ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

ராஜபாளையம்,
ராஜபாளையம் நல்லமநாயக்கன்பட்டி உபமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் சோழபுரம், தேசிகாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, அயன்கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், காமாட்சியாபுரம், ஆசிலாபுரம், தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார். 


Next Story