திருப்பத்தூர் மாவட்டத்தில் காளைவிடும் விழா நடத்த 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் காளைவிடும் விழா நடத்த விண்ணப்பித்த 24 மணிநேரத்தில் அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாகா தெரிவித்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் காளைவிடும் விழா நடத்த விண்ணப்பித்த 24 மணிநேரத்தில் அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் அமர்குஷ்வாகா தெரிவித்தார்.
24 மணி நேரத்தில்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் காளை விடும் விழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
மாவட்டத்தில் காளைவிடும் விழா நடத்துபவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிபெற வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்ட அளவிலான ஒரு குழுவும், வட்ட அளவிலான ஒரு குழுவும் அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். காவல்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.
கொரோனா நெறிமுறைகள்
கொரோனா நெறிமுறைகளான முககவசம் அனைவரும் அணிய வேண்டும். சமூகஇடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி கிருமிநாசினி அல்லது சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் 2,500 நபர்களுக்கு அதிகமாக பொது மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், திருப்பத்தூர் சப்-கலெக்டர் பானு, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்திலிங்கம், சுரேஷ்பாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story