ஆயுர்வேத வைத்தியசாலை நிர்வாகி சாவு


ஆயுர்வேத வைத்தியசாலை நிர்வாகி சாவு
x
தினத்தந்தி 4 Jan 2022 11:59 PM IST (Updated: 4 Jan 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆயுர்வேத வைத்தியசாலை நிர்வாகி இறந்தார். தற்கொலைக்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில்:
விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆயுர்வேத வைத்தியசாலை நிர்வாகி இறந்தார். தற்கொலைக்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆயுர்வேத வைத்தியசாலை நிர்வாகி
நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 62). இவர் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஒரு ஆயுர்வேத வைத்தியசாலையை நிர்வகித்து வந்தார். இவருடைய மனைவி சமீபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் ஆயுர்வேத வைத்தியசாலையுடன் இணைந்துள்ள வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சாவு
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் நேற்று முன்தினம் இரவு அசோக்குமார் பரிதாபமாக இறந்தார். 
இதுபற்றி வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யசோபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 சமீபத்தில் மனைவி இறந்ததால் மனம் உடைந்த நிலையில் இருந்த அவர் தற்கொலை செய்தாரா? அல்லது கடன் உள்ளிட்ட பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story