நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.12 சரிவு-வாரம் தோறும் ரூ.150 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.12 சரிவு-வாரம் தோறும் ரூ.150 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2022 12:00 AM IST (Updated: 5 Jan 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.12 சரிவடைந்தது. தொடர்ந்து விலை சரிவடைந்து வருவதால் ஒரு வாரத்திற்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.12 சரிவடைந்தது. தொடர்ந்து விலை சரிவடைந்து வருவதால் ஒரு வாரத்திற்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
கிலோவுக்கு ரூ.12 சரிவு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக கிலோவுக்கு ரூ.12 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.84-ஆக சரிவடைந்து உள்ளது.
இந்த விலை சரிவு குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவரும், கறிக்கோழி உற்பத்தியாளருமான வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
தமிழகத்தில் நாள்ஒன்றுக்கு 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது குளிர்ச்சியான சீதோஷண நிலை இருப்பதால் கறிக்கோழி உற்பத்தி 35 லட்சம் கிலோவாக அதிகரித்து உள்ளது. உற்பத்தி அதிகரிப்பே விலை சரிவுக்கு முக்கிய காரணம் ஆகும்.
ரூ.150 கோடி இழப்பு
இதனால் வியாபாரிகள் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து குறைத்து வாங்குகிறார்கள். எனவே ஒரு கிலோவுக்கு ரூ.20 வீதம் பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு வாரத்திற்கு ரூ.150 கோடி வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.75- ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

Next Story