தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Jan 2022 12:34 AM IST (Updated: 5 Jan 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கல்லக்குடி, ஜன.5-
கல்லக்குடி அருகே உள்ள திண்ணகுளம் கிராமத்தை சேர்ந்தவர்  பீட்டர் (வயது 50). இவர் தனியார் சிமெண்டு ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஜான்சிராணி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் மீண்டும் ஜான்சிராணி வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவு, ஜன்னல்கள் மூடியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பீட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story