கால்வாயில் பிணமாக கிடந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டது அம்பலம்
நெல்லை அருகே கால்வாயில் பிணமாக கிடந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை அருகே கால்வாயில் பிணமாக கிடந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கால்வாயில் மூதாட்டி உடல்
நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பு சூரப்பபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பாரெட்டியாரின் மனைவி பார்வதி (வயது 86). இவர் கடந்த 26-ந்தேதி பானான்குளம் அருகே உள்ள மணிமுத்தாறு கால்வாயில் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையில் போலீசார் பார்வதியின் பேரன் உறவு முறையான அதே ஊரை சேர்ந்த வாலிரான ரவிசங்கர் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பார்வதியை கொலை செய்தது தெரியவந்தது.
வாலிபர் கைது
பார்வதி வீட்டில் இருந்த போது அங்கு வந்த ரவிசங்கர் பார்வதியிடம் தீப்பெட்டி கேட்டுள்ளார். ஆனால் பார்வதி தீப்பெட்டி கொடுக்காமல் ரவிசங்கரை திட்டிஉள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவிசங்கர் பார்வதியை அடித்து கழுத்தில் மிதித்து கொலை செய்து உள்ளார். பின்னர் அவரது உடலை மணிமுத்தாறு கால்வாய் அருகே வீசி சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையில் போலீசார் ரவிசங்கரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story