அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை
அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அய்யப்ப சேவா சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து தினமும் விரதமிருக்கும் அய்யப்ப பக்தர்கள் மகரஜோதி தரிசனம் வரை அய்யப்பனை பக்தியோடு வழிபட்டு பின்னர் சபரிமலை செல்ல உள்ளனர். இதையொட்டி பெருமாள் கோவிலில் அய்யப்ப சேவா சங்கம் சார்பில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சுவாமிக்கு சிறப்பு கன்னி பூஜை, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story