சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு
x
தினத்தந்தி 5 Jan 2022 1:09 AM IST (Updated: 5 Jan 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள கோக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செபஸ்டியன்(வயது 24). இவர், 17 வயது சிறுமியை 2 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தாய் அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story