கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மங்களமேடு:
வேப்பந்தட்டை வட்டம் எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). கொத்தனார். இவரது மனைவி சுதா(32). இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன்- மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுதா கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த சங்கர் நேற்று மதுவில் பூச்சி மருந்தை(விஷம்) கலந்து குடித்துள்ளார். இதனால் வயிற்று வலி ஏற்பட்டு துடித்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story