மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி
மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
விராலிமலை
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்படி, கொடும்பாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல, கொடும்பாளூர் அரசு தொழிற்பயிற்சி மையம், அக்கல்நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேலப்பச்சக்குடி, சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அன்னவாசல், மாங்குடி, மதியநல்லூர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பொன்னமராவதி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னமராவதி லயன்ஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயதுடைய மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட மாந்தாங்குடி, மணவிடுதி, ஆதனக்கோட்டை ஆகிய அரசு பள்ளிகளில் பயிலும் 333 மாணவ- மாணவிகளுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டது. மேலும், வல்லத்திராக்கோட்டை, வெண்ணாவல்குடி, மாஞ்சான் விடுதி அரசு பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story