65 ரேஷன் கடைகளை பூட்டி ஊழியர்கள் திடீர் போராட்டம்


65 ரேஷன் கடைகளை பூட்டி ஊழியர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2022 1:54 AM IST (Updated: 5 Jan 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

65 ரேஷன் கடைகளை பூட்டி ஊழியர்கள் திடீர் போராட்டம்

வாழப்பாடி:-
வாழப்பாடியில் 65 ரேஷன் கடைகளை பூட்டி ஊழியர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடைகள்
தமிழகம் முழுவதும் நேற்று ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. இதன்படி வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
அப்போது வாழப்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட ரேசன் கடை பணியாளர்களிடம், தி.மு.க.வை சேர்ந்த சிலர், தங்களிடம் கூடுதலாக டோக்கன் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் கடை ஊழியர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
ஊழியர்கள் போராட்டம்
இதை கண்டித்து நேற்று வாழப்பாடியில் உள்ள 65 ரேஷன் கடைகளையும் பூட்டி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கூறுகையில், தி.மு.க.வினர் சிலர் ரேஷன் கடை ஊழியர்களை மிரட்டி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ேரஷன் கடை ஊழியர்களின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே  ரேஷன் கடைகள் மூடப்பட்டதால், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். மேலும் தங்களை தி.மு.க. நிர்வாகிகள் எனக்கூறி மிரட்டியவர்கள் மீது வாழப்பாடி போலீசில் ரேஷன்கடை ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story