ரெயில்களில் விதிமுறைகளை மீறிய 5,337 பேருக்கு ரூ.1¼ கோடி அபராதம்
ரெயில்களில் விதிமுறைகளை மீறிய 5,337 பேருக்கு ரூ.1¼ கோடி அபராதம்
சூரமங்கலம்:-
சேலம் கோட்டத்தில் கடந்த மாதம் ரெயில்களில் விதிமுறைகளை மீறிய 5 ஆயிரத்து 337 பேருக்கு ரூ.1¼ கோடி அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
முறைகேடுகள்
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் விதிமீறல்கள், பல்வேறு முறைகேடுகளை தடுப்பதற்காக சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் ஆலோசனையின்படி டிக்கெட் பரிசோதனைகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ெரயிலில் டிக்கெட் எடுக்காமல் 20,976 பேர் ஓசி பயணம் செய்தது தெரியவந்தது, அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 21 லட்சத்து 18 ஆயிரத்து 547 அபராதம் வசூலிக்கப்பட்டது,
ரூ.1¼ கோடி அபராதம்
இதேபோல் லக்கேஜ் கட்டணம் எடுக்காமல் மற்றும் அனுமதிக்கப்பட்ட லக்கேஜ்க்கு அதிகமாக லக்கேஜ் எடுத்துச் சென்றவர் என 45 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.35 ஆயிரத்து 441 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. முககவசம் அணியாத 360 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் புகைபிடித்த 11 பேருக்கு மொத்தம் ரூ.3 ஆயிரத்து 300 அபராதம் வசூல் செய்யப்பட்டது, கடந்த டிசம்பர் மாதத்தில் விதிமுறைகளை மீறிய 5 ஆயிரத்து 337 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 23 லட்சத்து 37 ஆயிரத்து 288 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
மேலும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் குழு நடத்திய சோதனையில் ரூ.7 கோடியே 24 லட்சத்து 33 ஆயிரத்து 324 அபராதமாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது,
Related Tags :
Next Story