தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 Jan 2022 2:03 AM IST (Updated: 5 Jan 2022 2:03 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புளியம்பட்டிமுல்லை நகரில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிய நிலையில் காணப்படுகிறது.இதனால் ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜசேகர், புளியம்பட்டி, போச்சம்பள்ளி.

போக்குவரத்து நெரிசல்

பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் நான்கு சாலை சந்திப்பில் நிறுத்தி பொருட்களை இறக்குகிறார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரண எதிரில் வரும் வாகனங்கள் இருப்பது தெரியாமல் சில நேரங்களில் விபத்து நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் விபத்துக்கள் நடப்பதையும், போக்குவரத்து நெரிசலையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரங்கராஜன், கபிலர்மலை, நாமக்கல்.

சுகாதார சீர்கேடு

சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா சிங்கிபுரம் வழியாக தம்மம்பட்டி செல்லும் சாலையில் பாக்குதோலை கொட்டி தீவைத்து விடுகின்றனர். இதனால் அந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், வாகனஓட்டிகளுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் அதிக புகை மூட்டமாக இருப்பதால் மூச்சு திணறல் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலுக்கும்பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திருஞானம், சிங்கிபுரம், வாழப்பாடி.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

கிருஷ்ணகிரி ஸ்டேட் பேங்க் அருகில் மார்க்கெட் ரோடு, கிருஷ்ணப்பா லே அவுட் காலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். சிலநேரங்களில் இவைகளால் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமமூர்த்தி, கிருஷ்ணகிரி.

சாக்கடை கால்வாய் வசதி

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா போடிநாயக்கன்பட்டி பஞ்சாயத்து மல்லிப்பாளையத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. சாக்கடை நீர் தெருவில் செல்வதால்துர்நாற்றம் வீசவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுகஙக வேண்டும்.

-பொதுமக்கள், மல்லிப்பாளையம், எடப்பாடி.

தெருநாய்கள் தொல்லை

சேலம் மாவட்டம் எருமாபாளையத்தில் புத்துமாரியம்மன் கோவில் பகுதியில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். இரவு நேரங்களில் வேலை முடிந்து வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை அவைகள் துரத்தி செல்கின்றன. இதனால் சிலர் தவறி விழுந்து காயமடைகின்றனர். தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-அசோக், எருமாபாளையம், சேலம்


Next Story