பயணிகளை கட்டாயம் முககவசம் அணிய செய்ய வேண்டும்


பயணிகளை கட்டாயம் முககவசம் அணிய செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 5 Jan 2022 2:37 AM IST (Updated: 5 Jan 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பயணிகளை கட்டாயம் முக கவசம் அணிய செய்ய வேண்டும் என்று ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்;
ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பயணிகளை கட்டாயம் முக கவசம் அணிய செய்ய வேண்டும் என்று ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய் குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது
தமிழக அரசு கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் பரவிவரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் மாவட்டந்தோறும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
முக கவசம் கட்டாயம்
இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதி டாக்சி டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பின்பற்றவேண்டும்.ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர்கள் முக கவசம் அணிவதுடன், தங்களது வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகளையும் கட்டாயம் முககவசம் அணிய செய்யவேண்டும். மேலும் தொற்று பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து செயல்பட வேண்டும். திருமண மண்டப உரிமையாளர்கள், நிகழ்ச்சிகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை மட்டும் அனுமதிக்க வேண்டும். மேலும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க உத்தர விட வேண்டும். பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் உரிய அனுமதி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story