மேகதாது திட்டத்தை அமல்படுத்த கோரி காங்கிரஸ் பாதயாத்திரை திட்டமிட்டபடி தொடங்கும் - டி.கே.சிவக்குமார் பேட்டி
மேகதாது திட்டத்தை அமல்படுத்த கோரி வருகிற 9-ந் தேதி காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை திட்டமிட்டப்படி தொடங்கப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதாவின் கலாசாரம்
ராமநகரில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து பா.ஜனதாவினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர். தேசிய அளவில் போராட்டம் நடத்தட்டும். மந்திரி அஸ்வத் நாராயணின் பேச்சை முதல்-மந்திரி உள்பட பா.ஜனதா தலைவர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். அவருக்கு பதவி உயர்வு வழங்கட்டும். பா.ஜனதாவின் கலாசாரம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி டெல்லிக்கு சென்று கர்நாடகத்திற்கு வரவேண்டிய நிதியை கேட்டு பெற வேண்டும். அவர் கொரோனா பரவலை தடுத்தாரா? இல்லையா? என்பது குறித்து விவாதம் வேண்டாம். கொரோனா பெயரில் விமான நிலையத்தில் பயணிகளுக்கு எவ்வளவு தொல்லை கொடுக்கப்படுகிறது என்பதை அவர் நேரில் சென்று பார்க்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கவில்லை
மேகதாது திட்டத்தை அமல்படுத்த கோரி நாங்கள் திட்டமிட்டப்படி வருகிற 9-ந் தேதி பாதயாத்திரையை தொடங்குவோம். கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் இருந்தபோது பா.ஜனதா கூட்டங்கள் நடைபெற்றன. அப்போது அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். எங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 100 வழக்குகள் போட்டு எங்களை 100 முறை சிறையில் தள்ளினாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். மக்கள் சார்பில் அவர்களின் குரலாக நாங்கள் போராடுவோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story